கொழும்பு மாநகர சபைக்கு ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து போட்டியிடும் தீர்மானத்தை அறிவிப்பதற்கு மார்ச் 20 ஆம் திகதி வரை ஐக்கிய மக்கள் சக்திக்கு கால அவகாசம் வழங்க UNP தீர்மானித்துள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஷ்டர்கள் மத்தியில் இடம்பெற்ற கலந்துரையாடலில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
கொழும்பு மாநகர சபை தவிர்ந்த ஏனைய உள்ளூராட்சி மன்றங்களுக்கு இணைந்து போட்டியிடத் தயாராக இருந்தால் மார்ச் 20 ஆம் திகதிக்கு முன்னர் தீர்மானத்தை அறிவிக்க முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.