மிதிகம, பத்தேகம பகுதியில் அமைந்துள்ள வீடொன்றின் மீது இன்று (17) அதிகாலை துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.
குறித்த வீட்டின் ஜன்னல்கள் மற்றும் சுவரில் பல துப்பாக்கிச் சூடுகள் நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இதனால், உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை என்பதுடன், துப்பாக்கிச் சூட்டுக்கான காரணம் அல்லது சந்தேக நபர்கள் குறித்த எந்த விபரமும் இதுவரை கண்டறியப்படவில்லை.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மிதிகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.