புஷ்பா 3-ம் பாகம் தொடர்பில் படத்தின் தயாரிப்பாளர் ரவி ஷங்கர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது
அதன்படி சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா ஜோடியாக நடித்த ‘புஷ்பா’ படம் 2021-ல் வெளியாகி வசூல் சாதனை நிகழ்த்தியதுடன் அல்லு அர்ஜுனுக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருதையும் பெற்றுக்கொடுத்தது.
இதையடுத்து ‘புஷ்பா’ படத்தின் இரண்டாம் பாகம் தயாராகி கடந்த வருடம் டிசம்பர் மாதம் வெளியாகி ரூ.1,500 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை நிகழ்த்தியது. இதில் அல்லு அர்ஜுன் சந்தன கட்டைகளை கடத்துபவராக நடித்து இருந்தார்.
இன்னிலையில் ‘புஷ்பா’ 3-ம் பாகம் எப்போது உருவாகும் என்று ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு நிலவியிருந்ததுடன் 2028-ம் ஆண்டு புஷ்பா 3-ம் பாகம் திரைக்கு வரும் என்று படம் குறித்து புதிய தகவலை படத்தின் தயாரிப்பாளர் ரவி ஷங்கர் அறிவித்துள்ளார்