எலான் மஸ்க்கின் சமூக ஊடக தளமான எக்ஸ் (முன்னர் டுவிட்டர் என்று அழைக்கப்பட்டது), இந்திய அரசாங்கத்திற்கு எதிராக சட்டப்பூர்வ சவாலைத் தொடங்கியுள்ளது.
இந்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் அதன் தணிக்கை திறன்களை சட்டவிரோதமாக விரிவுபடுத்துவதாகக் குற்றம் எக்ஸ் சாட்டியுள்ளது.
மார்ச் 5, 2025 அன்று தாக்கல் செய்யப்பட்ட வழக்கு, பேச்சு சுதந்திரத்தைப் பாதுகாப்பதற்காக நிறுவப்பட்ட சட்டப் பாதுகாப்புகளைத் தவிர்த்து, உள்ளடக்கத்தை அகற்றுவதற்கான ஒரு இணையான அமைப்பை புது டெல்லி உருவாக்கியுள்ளது என்று குற்றம் சாட்டுகிறது.
பில்லியனர் தனது ஏனைய உயர்மட்ட முயற்சிகளான ஸ்டார்லிங்க் மற்றும் டெஸ்லாவை இந்தியாவில் தொடங்கத் தயாராகி வருவதாகக் கூறப்படும் நிலையில், இந்த சட்டப் போராட்டம் ஒரு முக்கியமான நேரத்தில் வருகிறது.
கடந்த ஆண்டு உள்துறை அமைச்சகத்தால் தொடங்கப்பட்ட உள்ளடக்கத்தைத் தடுக்கும் வலைத்தளத்தைப் பயன்படுத்த இந்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் மற்ற அரசுத் துறைகளை ஊக்குவிப்பதாக எக்ஸின் வழக்கு கூறுகிறது.
முறைப்பாட்டின் படி, இந்திய சட்டத்தின் கீழ் பாரம்பரியமாக தேவைப்படும் கடுமையான பாதுகாப்புகள் இல்லாமல் எண்ணற்ற அரசு அதிகாரிகள் உள்ளடக்கத்தை அகற்ற உத்தரவுகளை பிறப்பிக்க இந்த வலைத்தளம் உதவுகிறது.
எவ்வாறெனினும் மஸ்க்கின் பிற முயற்சிகளுக்குத் தேவையான அனுமதிகள் மற்றும் உரிமங்களை அங்கீகரிக்க அரசாங்கத்தின் விருப்பத்தை இந்த சர்ச்சை பாதிக்கலாம் என்று சில ஆய்வாளர்கள் ஊகிக்கின்றனர்.
கர்நாடக மேல் நீதிமன்றம் இந்த வார தொடக்கத்தில் இந்த வழக்கை சுருக்கமாக விசாரித்தது. ஆனால் இறுதி முடிவு எதுவும் எட்டப்படவில்லை.
மார்ச் 27 அன்று நீதிமன்றம் தொடர்ந்து வாதங்களை விசாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.