பரீஸ் நகரில் உள்ள 500 தெருக்களில் கார் உள்ளிட்ட மோட்டார் வாகனங்கள் செல்வதற்கு தடை விதிக்க பிரான்ஸ் அரசாங்கம் முடிவு செய்துள்ளது.
காற்று மாசடைவைத் தடுக்கும் வகையில் இத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பரீஸில் 6,000க்கும் மேற்பட்ட வீதிகள் உள்ளன. அவற்றில் சுமார் 220 வீதிகளில் கார்கள் உள்ளிட்ட மோட்டார் வாகனங்கள் செல்வதற்கு ஏற்கனவே தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையிலேயே பிரான்ஸ் அரசு மேலும் 500 வீதிகளில் மோட்டார் வாகனங்கள் செல்வதற்கு தடை விதிக்கத் தீர்மானித்துள்ளது.
இதேவேளை பிரான்ஸில் சைக்கிள் மற்றும் பொதுப்போக்குவரத்தை உபயோகிக்க மக்களை ஊக்குவிக்கும் முயற்சிகள் இடம்பெற்று வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.