சில வருடங்களின் பின்னர் கொழும்பு மற்றும் கோட்டை பகுதிகளில் சிக்குன்குனியா நோய் பரவல் அதிகமாக பதிவாகி வருவதாக சுகாதார திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.
நுளம்புகள் பெருகும் இடங்களை முடிந்தவரை அழிப்பதன் மூலம் மட்டுமே சிக்குன்குனியா பரவுவதை கட்டுப்படுத்த முடியும் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.
“சிக்குன்குனியா” நோய் தற்போது ஆப்பிரிக்கா, அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் ஆசியக் கண்டங்களிலும் பசுபிக் மற்றும் இந்தியப் பெருங்கடல் தீவுகளிலும் பரவும் நோயாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
சிக்குன்குனியா வைரஸால் பாதிக்கப்பட்ட நுளம்பு கடித்தால் மனிதர்களுக்கும், பாதிக்கப்பட்ட பயணிகளிடமிருந்து பாதிக்கப்படாத பகுதிகளுக்கும் பரவுகிறது.
இலங்கையில் மீண்டும் சிகன்குனியா பரவும் சூழல் ஏற்பட்டுள்ளதாக சுகாதார திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.
தற்சமயம் தொடரும் மழையுடனான வானிலையால், நுளம்புகள் பெரும் இடங்களை அழித்து, சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்திருக்மாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
நாட்டில் மீண்டும் சிக்குன்குனியா நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளமையினால், இதுதொடர்பான அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக வைத்திய உதவியை நாடுமாறு சுகாதார அதிகாரிகள் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளனர். சீரற்ற காலநிலை காரணமாக தற்போது நுளம்புகளின் பரவல் அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், மீண்டும் நாட்டில் சிக்கன்குனியா நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும் நுளம்புகள் பெருகும் இடங்களை அழிப்பதன் மூலம் சிக்குன்குனியா பரவுவதைக் கட்டுப்படுத்த முடியும் எனவும் வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர். உலகம் முழுவதும் சுமார்…
நாட்டின் பல பகுதிகளில் தற்போது பெய்து வரும் கடும் மழையால் டெங்கு மற்றும் சிக்குன்குனியா நோய் பரவும் அபாயம் அதிகம் இருப்பதாக சுகாதார அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள இலங்கை பொது சுகாதார பரிசோதகர் சங்கத்தின் செயலாளர் சமில் முத்துக்குடா, டெங்குவை பரப்பும் அதே வகையான நுளம்புகள் தான் சிக்குன்குனியா நோயை பரப்புவதாகவும் கூறியுள்ளார். நீண்ட வார இறுதி மற்றும் பாடசாலை விடுமுறை காரணமாக, பலர் வெளியிடங்களுக்குச்…
இரண்டு தசாப்தங்களுக்கு முன்னர் சர்வதேச ரீதியில் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்திய சிக்குன்குனியா வைரஸ் மீண்டும் பரவும் சாத்தியம் அதிகரித்துள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனம் ( WHO) எச்சரித்துள்ளது. இந்த வைரசால் காய்ச்சல், கடுமையான மூட்டு வலி, மற்றும் நீண்டகால இயலாமை ஏற்படும் அபாயம் இருப்பதாகவும், வைரஸ் பரவலை கட்டுப்படுத்த உடனடி தடுப்பு நடவடிக்கைகள் அவசியம் என்றும் உலக சுகாதார ஸ்தாபனம் வலியுறுத்தியுள்ளது. இது குறித்து உலக சுகாதார ஸ்தாபனத்தின் அதிகாரி…