துருக்கிய ஜனாதிபதி ரெசெப் தையிப் எர்டோகனின் முக்கிய போட்டியாளர் முறைப்படி கைது செய்யப்பட்டு ஊழல் குற்றச்சாட்டுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்.
ஞாயிற்றுக்கிழமை (23) நடைபெற்ற வாக்கெடுப்பில், இஸ்தான்புல்லின் மேயரான எக்ரெம் இமாமோக்லு, குடியரசுக் கட்சி மக்கள் கட்சியின் (CHP) 2028 ஜனாதிபதி வேட்பாளராகத் தேர்ந்தெடுக்கப்படவிருந்தார்.
கைதான அவர் இந்தக் குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளார்.
மேலும் அவை அரசியல் ரீதியாக உள்நோக்கம் கொண்டவை என்றும் கூறியுள்ளார்.
அவரது தடுப்புக்காவல் துருக்கியில் ஒரு தசாப்தத்திற்கும் மேலாக நடந்த மிகப்பெரிய போராட்டங்களில் சிலவற்றைத் தூண்டியது.
மறுபுறம் எர்டோகன் ஆர்ப்பாட்டங்களைக் கண்டித்து, CHP “அமைதியைக் குலைத்து, நமது மக்களைத் பிளவுபடுத்த” முயற்சிப்பதாகக் குற்றம் சாட்டியுள்ளார்.
கடந்த புதன்கிழமை நடைபெற்ற விசாரணையின் ஒரு பகுதியாக கைது செய்யப்பட்ட மற்ற அரசியல்வாதிகள், பத்திரிகையாளர்கள் மற்றும் தொழிலதிபர்கள் உட்பட 100க்கும் மேற்பட்டவர்களில் இமாமோக்லுவும் ஒருவர்.
இது தொடர்ச்சியாக ஐந்து இரவுகள் ஆர்ப்பாட்டங்களைத் தூண்டியது.
விசாரணை நிலுவையில் உள்ள நிலையில் அவர் காவலில் வைக்கப்பட்டார்.
சிலிவ்ரியில் உள்ள சிறைக்கு அவர் கொண்டு செல்லப்பட்டதாக AFP மற்றும் உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அதேநேரம், இமாமோக்லு மேயர் பதவியில் இருந்தும் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார் என்று துருக்கியின் உள்துறை அமைச்சகம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.