கரையோரப் புகையிரத மார்க்கத்தின் மொரட்டுவை, எகொடஉயன புகையிரத நிலையத்தில் பயணிகள் மேம்பாலம் திடீரென இடிந்து வீழ்ந்துள்ளது.
எவ்வாறாயினும், பாலம் இடிந்து விழும் போது பாலத்தின் மீது யாரும் நடமாடவில்லை எனவும், எவருக்கும் காயம் ஏற்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் நேற்றிரவு 7.40 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதனால், மொரட்டுவையில் இருந்து பாணந்துறை வரை செல்லும் புயிரத மார்க்கம் பாதிக்கப்பட்டதாகவும், ஒரு பாதை மாத்திரமே இயங்கி வருவதாகவும் கூறப்படுகின்றது.
தற்போது ரயில்வே துறை தொழில்நுட்ப அதிகாரிகள் மற்றும் மின்சார சபை அதிகாரிகள் ரயில் பாதையின் குறுக்கே இடிந்து விழுந்த பாலத்தின் குப்பைகளை அகற்றும் பணிகளை முன்னெடுத்திருந்தனர்.