கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு இன்று (27) எட்டரை மணிநேர நீர் வெட்டு அமுல்படுத்தப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகால் அமைப்பு சபை அறிவித்துள்ளது.
அதன்படி, பேலியகொடை, வத்தளை, ஜா – எல, கட்டுநாயக்க, சீதுவை நகர சபை பகுதிகள், களனி, பியகம, மஹர, தொம்பே, கட்டான, மினுவாங்கொடை மற்றும் கம்பஹா பிரதேச சபையைச் சேர்ந்த பகுதிகளுக்கு இன்று காலை 8.30 மணி முதல் மாலை 5.00 மணிவரை நீர் வெட்டு அமுல்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பியகம நீர் சுத்திகரிப்பு நிலையத்தின் மின்சார அமைப்பில் அத்தியாவசிய பராமரிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றமை காரணமாகவே நீர் வெட்டு அமல்படுத்தப்படுவதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகால் அமைப்பு சபை தெரிவித்துள்ளது.