அம்பலாந்தோட்டை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொக்கல்ல பகுதியில் அமைந்துள்ள வீடொன்றில் இன்று (31) காலை மோட்டார் சைக்கிளில் வந்த இருவரினால் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்தப் துப்பாக்கிச் சூட்டில் வீட்டில் இருந்த நபர் காயமடைந்து ஹம்பாந்தோட்டை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
காயமடைந்தவர் கொக்கல்ல, அம்பலாந்தோட்டை பகுதியைச் சேர்ந்த 30 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
ஆரம்பக் கட்ட விசாரணைகளில் காயமடைந்த தரப்பினர் வேறு தரப்பினருடன் சிறிது காலமாக இருந்த தனிப்பட்ட தகராறு காரணமாக துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாகவும், துப்பாக்கிச் சூட்டுக்கு இந்த நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியே பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
சந்தேகநபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அவர்களை கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை அம்பலாந்தோட்டை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.