இலங்கை வாழ் இஸ்லாமியர்களினால் ரமழான் பண்டிகை இன்று (31) கொண்டாடப்படுகிறது.
உப பிறைக் குழுக்களின் அறிக்கையின் படி, 2025 மார்ச் 30 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இரவு ஹிஜ்ரி 1446 ஷவ்வால் மாதத்தின் தலைப்பிறை தென்பட்டுள்ளது.
அந்த வகையில் 2025 மார்ச் 31 ஆம் திகதி திங்கட்கிழமை ஹிஜ்ரி 1446 ஷவ்வால் மாதத்தின் 01 ஆம் பிறை என கொழும்பு பெரிய பள்ளிவாசல், அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் பிறைக் குழு மற்றும் முஸ்லிம் சமய பண்பட்டலுவல்கள் திணைக்களம் (DMRCA) அகியன அறிவித்துள்ளது.
அந்த அறிவிப்புக்கு அமைவாக ஒரு மாத நோன்பு முடிவடைந்தை தொடர்ந்து தலைப்பிறை தரிசனத்துடன், இஸ்லாமியர்கள் ஈதுல் பித்ர் பெருநாள் அல்லது ரமழான் தினத்தை கொண்டாடுகிறார்கள்.
இதேவேளை, ரமழான் பண்டிகையை முன்னிட்டு நாடு முழுவதும் உள்ள முஸ்லிம் பாடசாலைகளுக்கு இன்று (01) விடுமுறை வழங்க கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.
இந்த விடுமுறை நாளுக்கான கல்வி நடவடிக்கைகள் மற்றொரு திகதிகயில் அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இஸ்லாத்தின் ஐந்து கடமைகளில் ஒன்றான ரமழான் மாத நோன்பு , உலக ஆசைகளிலிருந்து தூரமாகி, அர்ப்பணிப்பு மற்றும் எளிமையுடனான முன்மாதிரி நடைமுறையை நிலைநிறுத்துவதன் முக்கியத்துவத்தை பிரதிபலிக்கிறது.
உலகெங்கிலும் பசியால் வாடும் மக்களுக்கு தானதருமம் செய்யவும், உள்ளத்தை கட்டுப்படுத்தும் திறனை வளர்த்துக் கொள்ளவும், இந்த மாதம் ஒரு சிறந்த வாய்ப்பாக முஸ்லிம்கள் கருதுகின்றனர்.
ரமழான் மாதத்தில், முஸ்லிம்கள் விடியலுக்கும் சூரிய அஸ்தமனத்திற்கும் இடையில் உணவு உண்ணவோ, நீர் அருந்தவோ மாட்டார்கள். இது நோன்பு எனப்படும்.
ரமழான் மாதத்தை பற்றி அல்லாஹ் அல்குர்ஆனில் இவ்வாறு கூறுகிறார் :
”ஈமான் கொண்டோர்களே! உங்களுக்கு முன் இருந்தவர்கள் மீது நோன்பு விதிக்கப்பட்டிருந்தது போல் உங்கள் மீதும் (அது) விதிக்கப்பட்டுள்ளது (அதன் மூலம்) நீங்கள் தூய்மையுடையோர் ஆகலாம்” அல்குர்ஆன் 2 ஆவது அத்தியாயம்:183 ஆவது வசனம்
ரமழான் மாதம் ஏன் சிறப்புக்குரிய மாதமாக திகழ்கிறது என்றால், இந்த புனிதமிக்க ரமலான் மாதத்தில் தான் திருகுர்ஆன் அருளப்பட்டதால் இந்த மாதம் சிறப்பு பெறுகிறது.
ஆயிரம் மாதங்களை விட சிறந்த இரவான லைலத்துல் கத்ர் எனும் இரவு இம்மாதத்தில் இருப்பதால் இம்மாதம் சிறப்பு மிக்க மாதமாகிறது. நன்மை, தீமைகளை பிரித்து நேர்வழி எது என்பதை பிரித்து காட்டும் அருள் மறை திருகுர்ஆன் நபி (ஸல்) அவர்களுக்கு லைலத்துல் கத்ர் இரவில் அருளப்பட்டது. அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ்(ரழி) நூல் : அஹமது, இப்னு கதீர்
பல முஸ்லிம்கள் ரமழான் முடிந்தவரை குர்ஆனைப் படிக்க முயற்சிப்பார்கள்.
ரமழான் என்பது ஆன்மீக சிந்தனை, பிரார்த்தனை, நல்ல செயல்களைச் செய்தல் மற்றும் குடும்பத்தினருடனும் நண்பர்களுடனும் நேரத்தை செலவிடுவதற்கான நேரமாகும்.
இதனாலேயே நோன்பு கடமையான ரமலான் மாதத்திற்குப் “பொறுமையின் மாதம்’ என்ற சிறப்பு பெயரும் உண்டு. “நோன்பு, பொறுமையின் சரி பாதி’ என்று சாந்த நபி (ஸல்) அவர்கள் சாற்றியதைத் திர்மிதீ, அஹமது முதலிய நூல்களில் காணலாம்.
பொதுவாக, மக்கள் தங்கள் சமூகங்களுடன் இணைவதற்கும், உதவி தேவைப்படும் நபர்களை அணுகுவதற்கும் சிறப்பான முயற்சியை மேற்கொள்வார்கள்.