குவஹாத்தியில் சென்னை சூப்பர் கிங்ஸை 6 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய, ரியான் பராக் தலைமையிலான ராஜஸ்தான் ரோயல்ஸ் (RR) அணியானது 2025 இந்தியன் பிரீமியர் லீக் சீசனில் முதல் வெற்றியை பதிவு செய்தது.
இன்னிங்ஸில் 182/9 ஓட்டங்களை எடுத்த போதிலும், தனது அணி துடுப்பாட்டத்தில் தோல்வியடைந்ததாக பராக் உணர்ந்தார், ஆனால் சிறந்த பந்துவீச்சு மற்றும் களத்தடுப்பு மூலம் அதை ஈடுசெய்தார்.
நிதிஷ் ராணா 36 பந்துகளில் 81 ஓட்டங்கள் எடுத்த போதிலும் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி ஒன்பது விக்கெட்டுக்கு 182 ஓட்டங்களை மட்டுமே எடுக்க முடிந்தது.
எனினும், வனிந்து ஹசரங்கா மற்றும் ஜோஃப்ரா ஆர்ச்சர் போன்றவர்களின் பந்துவீச்சு திறமைதான் இந்த சீசனில் அவர்களுக்கு முதல் வெற்றியை பெற்றுத் தந்தது.
அதேநேரம், ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, அவர்களின் துடுப்பாட்ட தவறுகளினால் இந்த சீசனில் தொடர்ச்சியாக இரண்டாவது தோல்வியை சந்தித்தன.
சேஸிங்கில் தோனி 7 ஆவது இடத்தில் களமிறங்கிய பின்னரும், சென்னை அணியால் தங்கள் முன்னணி துடுப்பாட்ட வீரர்களில் பங்களிப்பினை பெற முடியாது போனது.
ருதுராஜ் கெய்க்வாட் மாத்திரம் 44 பந்துகளில் 63 ஓட்டங்களை எடுத்து அணியின் வெற்றிக்காக பாடுபட்டார்.
சென்னை அணியை ராஜஸ்தான் ரோயல்ஸ் வென்ற பின்னர் புள்ளிகள் பட்டியலில் பெரிய அளவில் மாற்றம் எதுவும் நடக்கவில்லை.
இந்த சீசனில் முதல் வெற்றியைப் பெற்றதால், மூன்று போட்டிகளில் ஒரு வெற்றியுடன் ஐ.பி.எல். பட்டியலில் ஒன்பதாவது இடத்தில் ராஜஸ்தான் உள்ளது.
ராஜஸ்தான் இப்போது அதன் பெயருக்கு அடுத்ததாக இரண்டு புள்ளிகளைப் பெற்றுள்ளது.
மும்பை அணி 2 போட்டிகளில் விளையாடி இரண்டிலும் தோல்வியடைந்ததால், அவர்கள் மும்பை இந்தியன்ஸை விட பட்டியலில் முதலிடத்தில் உள்ளனர்.
ராஜஸ்தானின் நிகர ஓட்ட விகிதம் (NRR) தற்போது -1.112 ஆக உள்ளது.
மறுபுறம் சென்னை அணி, முதல் போட்டியில் பெற்ற வெற்றியை இரண்டாவது மற்றும் மூன்றாவது போட்டிகளில் பிரதிபலிக்க முடியாமல் ஐ.பி.எல். பட்டியலில் ஏழாவது இடத்தில் உள்ளது.
முதலில் பெங்களூ அணிக்கு எதிராகவும், பின்னர் ராஜஸ்தான் அணிக்கு எதிராகவும் சென்னை அணி தொடர்ச்சியாக தோல்வியடைந்த பின்னர், சென்னை தற்போது சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுடன் விளையாடிய போட்டிகள் மற்றும் புள்ளிகள் அடிப்படையில் சமமாக உள்ளது.
சென்னை அணி தனது நிகர ஓட்ட விகிதம் ஹைதராபாத் மற்றும் ராஜஸ்தான் அணிகளை விட அதிகமாக இருப்பதால் ஏழாவது இடத்தில் உள்ளது.
இதேவேளை, நேற்று மாலை விசாகப்பட்டினத்தினால் நடந்த இந்தியன் பிரீமியர் லீக் தொடரின் 10 ஆவது போட்டியில் டெல்லி கேபிட்டல்ஸ் அணியானது 7 விக்கெட்டுகளினால் சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தை வீழ்த்தியது.
போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பேட் கம்மின்ஸ் தலைமையிலான ஹைதராபாத் அணியானது 18.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 163 ஓட்டங்களை மாத்திரம் எடுத்தது.
அனிகேத் வர்மா மாத்திரம் அதிகபடியாக 41 பந்துகளில் 74 ஓட்டங்களை எடுத்தார்.
பந்து வீச்சில் டெல்லி அணி சார்பில் மிட்செல் ஸ்டார்க் 5 விக்கெட்டுகளையும், குல்தீப் யாதவ் 3 விக்கெட்டுகளையும் அதிகபடியாக எடுத்தனர்.
164 ஓட்டம் என்ற வெற்றி இலக்கினை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய டெல்லி அணியானது 16 ஓவர்களில் மூன்று விக்கெட் இழப்புக்கு 166 ஓட்டங்களை எடுத்து வெற்றி இலக்கினை கடந்தது.
ஆரம்ப துடுப்பாட்ட வீரர் ஃபாஃப் டு பிளெசிஸ் அதிகபடியாக 27 பந்துகளில் 50 ஓட்டங்களை எடுத்தார்.
பந்து வீச்சில் ஜீஷன் அன்சாரி மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றினார்.