2023ஆம் ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற உலகக் கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் ரோகித் தலைமையிலான இந்திய அணி, அவுஸ்திரேலிய அணியிடம் தோல்வியைத் தழுவியிருந்தது. இதேபோன்று கோலி தலைமையிலான இந்திய அணி, கடந்த 2019ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பையின் அரையிறுதி போட்டியில் நியூசிலாந்து அணியிடம் தோல்வியைத் தழுவியிருந்தது.
இந்த இரு சம்பவங்களும் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில், ”உங்களது அடுத்த பெரிய இலக்கு என்ன என ஊடகமொன்று எழுப்பிய கேள்விக்கு, விராட் கோலி தெரிவித்த பதில் ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதன் போது” விராட் தனது அடுத்த பெரிய இலக்கு 2027 ஆண்டின் ஒருநாள் உலகக் கோப்பையை வெல்வதே என பதிலளித்துள்ளார்.
இந்திய அணி தலைவரான ரோகித் ஷர்மாவும் அவருடைய அடுத்த இலக்கு 2027 ஒருநாள் உலகக் கோப்பை தான் என சமீபத்தில் கூறியிருந்தார்.
இந்நிலையில் இந்திய அணியின் தூண்களாக கருதப்படும் கோலியும், ரோகித்தும் 2027 உலகக்கோப்பையை வெல்ல வேண்டும் என முனைப்புடன் இருப்பது ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.