motogp world championship தொடரின் 4வது கட்டப்போட்டி கட்டாரில் நடைபெறவுள்ள நிலையில் 3வது கட்டப்போட்டியில் ஏற்பட்ட எதிர்பாராத தோல்வியிலிருந்து தான் மீண்டுவிட்டதாகவும் கட்டார் குரோன்ப்ரீ போட்டியில் வெற்றிப்பெற்று மீள்வருகையை காண்பிக்கப்போவதாக முன்னாள் சம்பியன் மார்க் மார்க்கஸ் தெரிவித்துள்ளார்.
22 கட்டங்களை கொண்ட இப்பருவ காலத்திற்கான motogp world championship தொடர் ஆரம்பமாகியுள்ளது. முதல் இரண்டு போட்டிகளின் முடிவில் முன்னாள் சம்பியன் மார்க் மார்க்கஸ் வெற்றிப்பெற்றிருந்தார். இந்நிலையில் மூன்றாவது கட்டப்போட்டி அமெரிக்காவில் இடம்பெற்றது. 19 சுற்றுக்களை கொண்டதாக அமைந்த இப்போட்டியில். இம்முறையும் முன்னாள் சம்பியன் மார்க் மார்க்கஸ் முன்னிலைப்பெற்று அசத்தினார்.
4வது சுற்றில் வைத்து இரண்டாமிடத்திலிருந்த அலெக்ஸ் மார்க்கஸை பின்னக்கு தள்ளி பக்னய்யா இரண்டாமிடத்திற்கு முன்னேறி அசத்தினார். 9வது சுற்றில் வைத்து மிகப்பெரிய அதிர்ச்சியாக முன்னிலையில் சென்று கொண்டிருந்த மார்க்மார்க்கஸின் வாகனம் விபத்துக்குள்ளானது. இதனால் பக்னய்யா முதலிடத்திற்கு முன்னேறியதோடு மார்க் மார்க்கஸினால் தொடர்ச்சியாக போட்டியில் கலந்து கொள்ள முடியாமல் போனது. இதனால் அவரின் பெரும் எதிர்ப்பாரப்பு கேள்விக்குறியாகியது. தொடர்ச்சியாக இப்போட்டியில் வெற்றிப்பெற்று ஹட்ரிக் வெற்றியை பதிவு செய்ய எதிர்ப்பார்த்திருந்த நிலையில் அவர் போட்டியிலிருந்து வெளியேறினார்.
14வது சுற்றில் வைத்து பக்னய்யா மற்றும் அலெக்ஸ் மார்க்கஸிற்கிடையிலான போட்டி சூடுபிடிக்க தொடங்கியது. 3சுற்றுக்களே எஞ்சியிருந்த நிலையில் மில்லர் 5மிடத்திற்கான போட்டியில் தீவீரமாக இறங்கினார். ஆதே நேரத்தில் 8மிடத்திற்கான போட்டியில் தீவீரமாக செயற்பட்ட சார்கோவின் வாகனமும் விபத்தை சந்தித்தது. அவரும் போட்டியிலிருந்து வெளியேறியிருந்த நிலையில் மற்றுமொரு வீரரான அல்டேகுரரின் வாகனமும் விபத்துக்குள்ளானது.
இந்நிலையில் பெக்கோ பக்னய்யா 19 சுற்றுக்களையும் 39 நிமிடங்களில் ஓடி முடித்து 25 புள்ளிகளை பெற்று அசத்தினார். தொடர்ச்சியாக 3வது முறையாகவும் மார்க் மார்க்கஸின் தம்பி அலெக்ஸ் மார்க்கஸ் 2மிடத்தினை பெற்று அசத்தினார். ஓட்டுமொத்த போட்டிகளின் முடிவில் அலெக்ஸ் மார்க்கஸ் 87 புள்ளிகளுடன் முதலிடத்திலும் மார்க் மார்க்ஸ் 86 புள்ளிகளுடன் இரண்டாமிடத்திலும் உள்ளமை குறிப்பிடதக்கது.