2025 இந்தியன் பிரீமியர் லீக்கில் ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணியை வீழ்த்தி குஜராத் டைட்டன்ஸ் (GT) அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ஜோஸ் பட்லரின் அரைசதம் மற்றும் மொஹமட் சிராஜ்ஜின் மூன்று விக்கெட்டுகள் என்பன குஜராத்துக்கு வெற்றியை பதிவு செய்ய பெரும் பங்களித்தது.
இது தவிர 18 ஆவது சீசனில் இரண்டாவது வெற்றிக்காக 170 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய குஜராத்துக்கு ஆரம்ப துடுப்பாட்ட வீரர் சாய் சுதர்சன், 36 பந்துகளில் 7 பவுண்டரிகள் மற்றும் 1 சிக்ஸருடன் 49 ஓட்டங்களை குவித்தார்.
பட்லர் 39 பந்துகளில் 5 பவுண்டரிகள் மற்றும் 6 சிக்ஸர்களுடன் 73 ஓட்டங்களை ஆட்டமிழக்காமல் எடுத்தார்.
இறுதியாக 13 பந்துகள் மீதமிருந்த நிலையில் பெங்களூரு அணியை அவர்களின் சொந்த மைதானத்தில் குஜராத் வீழ்த்தியது.
பெங்களூரு அணிக்காக புவனேஷ்வர் குமார் மற்றும் ஜோஷ் ஹேசில்வுட் சிறப்பாக பந்து வீசினர்.
முன்னதாக, மொஹமட் சிராஜ் மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தி எதிரணியை அதிர்ச்சிக்குள்ளாக்கினார்.
அவர் தனது மூன்று ஓவர்களில் 19 ஓட்டங்களை மட்டுமே விட்டுக்கொடுத்தார்.
சிராஜுக்கு சாய் கிஷோர் உதவியாக இருந்தார், அவர் இரண்டு துடுப்பட்ட வீரர்களை வெளியேற்றி 4 ஓவர்களில் 22 ஓட்டங்களை கொடுத்தார்.
பிரசித் கிருஷ்ணாவும் அற்புதமான பந்து வீச்சை வெளிப்படுத்தினார், ஒரு துடுப்பாட்ட வீரரை ஆட்டமிழக்கச் செய்து, தனது நான்கு ஓவர்களில் 26 ஓட்டங்களை மட்டுமே விட்டுக்கொடுத்தார்.
இது தவிர, அர்ஷத் கான் மற்றும் இஷாந்த் சர்மாவும் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர்.
ஆச்சரியப்படும் விதமாக, ரஷீத் கான் பெங்களூரு அணிக்கு மிகவும் விலையுயர்ந்த பந்து வீச்சாளராக இருந்தார்.
ஏனெனில் அவர் 54 ஓட்டங்களை விட்டுக்கொடுத்து விக்கெட் எடுக்கவில்லை.
எவ்வாறெனினும், துடுப்பாட்டத்தில் பெங்களூரு 20 ஓவர்களில் 169/8 ஓட்டங்களை மாத்திரம் எடுத்தது.
பெங்களூரு அணிக்காக லியாம் லிவிங்ஸ்டோன் மட்டுமே அரைசதம் அடித்தார்.
அவர் 40 பந்துகளில் 5 சிக்ஸர்கள் மற்றும் 1 பவுண்டரியுடன் 54 ஓட்டங்களை எடுத்தார்.
இவர் தவிர அதகபடியாக டிம் டேவிட் 18 பந்துகளில் 32 ஓட்டங்களை எடுத்தார்.
ஜிதேஷ் சர்மாவும் அதிரடியாக விளையாடி 21 பந்துகளில் 5 பவுண்டரிகள் மற்றும் 1 சிக்ஸருடன் 33 ஓட்டங்களை பெங்களூரு அணிக்காக எடுத்தார்.
குஜராத் அணி இதுவரை இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்று ஒன்றில் தோல்வியடைந்துள்ளது.
மறுபுறம், தொடர்ச்சியாக இரண்டு போட்டிகளில் வென்ற பின்னர் பெங்களூரு அணி முதல் தோல்வியை சந்தித்து, தரவரிசையில் முதலிடத்தை இழந்தது.