சவுதி அரேபியா அரசாங்கம் புதிய பயணக் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
வங்கதேசம், பாகிஸ்தான் மற்றும் இந்தியா உள்ளிட்ட 14 நாடுகளைச் சேர்ந்த மக்களுக்கு சில விசாக்கள் வழங்குவதை நிறுத்தி வைத்துள்ளது.
ஹஜ் யாத்திரை காரணமாக ஏற்படும் கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்தும் முயற்சிகளுக்கு மத்தியில் இந்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
பல ஊடக அறிக்கைகளின்படி, ஹஜ் யாத்திரை முடிவடையவுள்ள ஜூன் நடுப்பகுதி வரை இந்தத் தடை அமுலில் இருக்கும்.
புதிய வழிகாட்டுதல்களின் கீழ், உம்ரா விசாக்கள், வணிக வருகை விசாக்கள் மற்றும் குடும்ப வருகை விசாக்கள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
ஆயிரக்கணக்கான மக்கள் புனித யாத்திரை மேற்கொள்ளும் இந்தியா, பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் போன்ற நாடுகளைச் சேர்ந்த யாத்ரீகர்களுக்கு சவுதி அரேபியாவின் இந்த விசா தடை ஏமாற்றத்தை அளித்துள்ளது.
முறையான பதிவு இல்லாமல் மக்கள் ஹஜ் செய்ய முயற்சிப்பதைத் தடுக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சவுதி அரேபியா அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஏனைய நாடுகளைச் சேர்ந்த குடிமக்கள் உம்ரா விசாக்கள் அல்லது சுற்றுலா விசாக்களுடன் சவுதி அரேபியாவிற்கு வருகை தந்து வருவதாகவும், புனித மக்காவில் ஹஜ் செய்ய சட்டவிரோதமாக அதிக காலம் தங்கியிருப்பதாகவும் அதிகாரிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.
சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான், நாடு சுமூகமான மற்றும் பாதுகாப்பான ஹஜ் யாத்திரையை நடத்துவதற்கு விசா ஒழுங்குமுறை அமலாக்கங்களை கடுமையாக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
புதிய முயற்சியின் ஒரு பகுதியாக, வெளிநாடுகளைச் சேர்ந்த தனிநபர்களுக்கு ஏப்ரல் 13 ஆம் திகதி வரை வருகை விசாக்கள் அல்லது உம்ரா விசாக்கள் வழங்கப்படும் என்று கூறப்படுகிறது.
அதன் பிறகு, பட்டியலில் உள்ள 14 நாடுகளைச் சேர்ந்த யாருக்கும் புதிய விசா வழங்கப்படாது.
சவுதி அரேபியா விசா தடையை எதிர்கொள்ளும் 13 நாடுகளை அறிக்கைகள் அடையாளம் கண்டுள்ளன.
மற்றொரு நாடு தெளிவாக அடையாளம் காணப்படவில்லை. அடையாளம் காணப்பட்ட 13 நாடுகள்:
1. இந்தியா
2. பாகிஸ்தான்
3. பங்களாதேஷ்
4. எகிப்து
5. இந்தோனேஷியா
6. ஈராக்
7. நைஜீரியா
8. ஜேர்தான்
9. அல்ஜீரியா
10. சூடான்
11. எத்தியோப்பியா
12. துனிஷயா
13. ஏமன்
14. மொரோக்கோ