மலர்ந்துள்ள தமிழ் புத்தாண்டு அனைவருடையை வாழ்விலும் மகிழ்ச்சியும், சுபீட்சத்தையும் ஏற்படுத்த வேண்டும் என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
மலர்ந்திருக்கும் தமிழ் – சிங்கள புத்தாண்டு சகல மக்களுக்கும் நல்ல ஆரோக்கியத்தையும், சுபீட்சத்தையும், செளபாக்கியங்களையும் வழங்கி மகிழ்ச்சிகரமான வாழ்க்கைக்கு வழியேற்படுத்த வேண்டும் என இறைவனை பிரார்த்திக்கிறேன்.
இலங்கையில் இந்து தமிழ் மக்களும், பௌத்த சிங்கள மக்களும் பொதுப்பண்டிகையாக சித்திரைப் புத்தாண்டை கொண்டாடுகிறார்கள்.
அனைத்து இன மக்களும் இணைந்து கொண்டாடும் பண்டிகையாக சித்திரைப் புதுவருடம் இருப்பதால் இலங்கையில் இது விமர்சையாக கொண்டாடப்படுகிறது.
சித்திரை புத்தாண்டை கொண்டாடி மகிழும் ஒட்டுமொத்த நாட்டு மக்களுக்கும் இப்புத்தாண்டு அமைதியும், மகிழ்ச்சியும் நிறைந்த சிறப்பான ஆண்டாக அமைய இறைவனை பிரார்த்தித்து, வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.”எனவும் தமது வாழ்த்துச் செய்தியில் செந்தில் தொண்டமான் கூறியுள்ளார்.