சப்ரகமுவ மாகாண சபையின் மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சின் முன்னாள் செயலாளரும், முன்னாள் திட்டமிடல் பணிப்பாளரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
71 மில்லியன் ரூபாய் நிதி மோசடி தொடர்பான விசாரணைகளுக்காகவே அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இரத்தினபுரியைச் சேர்ந்த 62 வயதுடைய ஆண் மற்றும் 52 வயதுடைய பெண் ஆகிய சந்தேக நபர்களே பொலிஸ் நிதி, வணிக குற்றப் புலனாய்வுப் பிரிவினால் நேற்று (29) கைது செய்யப்பட்டனர்.
எம்பிலிப்பிட்டிய பிரதேச சபையின் 2016 மற்றும் 2017 ஆம் ஆண்டுகளுக்கான 77 திட்டங்களுக்கான வவுச்சர்களை விடுவிப்பதற்கான ஆவணங்களில் கையொப்பமிட்ட குற்றச்சாட்டின் பேரில் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேக நபர்கள் நேற்று எம்பிலிப்பிட்டிய நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் மே 08 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.