கல்கிஸ்ஸை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஹுலுதகொட வீதியில் உள்ள கைவிடப்பட்ட காணியொன்றில் இருந்து நேற்று (01) மாலை வெட்டுக் காயங்களுடன் ஆணின் சடலமொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்த நபர் 23 வயதுடைய இரத்மலானை, மஹிந்தாராம வீதியில் வசிப்பவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இவர் கடந்த ஏப்ரல் 30 ஆம் திகதி வீட்டை விட்டு வெளியேறி வீடு திரும்பாததால், அவரது சகோதரர் கல்கிஸ்ஸை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளித்துள்ளார்.
சடலம் பிரேத பரிசோதனைக்காக களுபோவில வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்களை கைது செய்வதற்கான விசாரணைகளை கல்கிஸை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.