டெல்லி மற்றும் அதை அண்மித்த தேசிய தலைநகர் பகுதியில் இன்று (02) அதிகாலை இடியுடன் கூடிய மழை, பலத்த காற்று மற்றும் ஆலங்கட்டி மழை பெய்ததால், பரவலான போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
தேசிய தலைநகர் முழுவதும் வானிலை சீர்குலைவு ஏற்பட்டதால், 40க்கும் மேற்பட்ட விமானங்கள் திருப்பி விடப்பட்டன, கிட்டத்தட்ட 100 விமானங்கள் தாமதமாகின.
துவாரகாவின் ஜாஃபர்பூர் கலனில் பலத்த காற்று வீசியதால், காட்காடி நஹர் கிராமத்தில் உள்ள குழாய் கிணறு அறையின் மீது மரமொன்று முறிந்து விழுந்தது.
இதனால் குறித்த கட்டிடம் இடிந்து விழுந்ததில் 26 வயது பெண் மற்றும் அவரது மூன்று குழந்தைகள் உயிரிழந்தனர்.
இதற்கிடையில், இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) வெள்ளிக்கிழமை காலை டெல்லிக்கு சிவப்பு எச்சரிக்கை விடுத்தது.
கடுமையான இடியுடன் கூடிய மழை மற்றும் மணிக்கு 70-80 கிமீ வேகத்தில் பலத்த காற்று வீசும் என்று எச்சரித்தது.
பலத்த காற்று காரணமாக மரங்கள் கம்பிகளில் முறிந்து விழுந்ததால், டெல்லி பிரிவில் சுமார் 15 முதல் 20 ரயில்கள் தாமதமாகின.