இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு இடையிலான தற்போதைய நெருக்கடியைக் கருத்தில் கொண்டு பாகிஸ்தான் வானொலி நிலையங்கள் இந்திய பாடல்களை ஒலிபரப்புவதை நிறுத்திவிட்டதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன
பாகிஸ்தான் ஒலிபரப்பாளர்கள் சங்கம் நாடு முழுவதும் உள்ள பாகிஸ்தான் வானொலி நிலையங்களில் இந்திய பாடல்களை ஒலிபரப்ப தடை விதித்துள்ளதாக அதன் பொதுச் செயலாளர் ஷகீல் மசூத் அறிவித்தார்.
இந்நிலையில், பாகிஸ்தான் ஒலிபரப்பாளர்கள் சங்கத்தின் இந்த முடிவை அந்நாட்டு தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சர் அதாவுல்லாஹ் தரார் வரவேற்றுள்ளதாகவும் இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இதுபோன்ற சோதனையான காலங்களில் தேசிய ஒற்றுமையை மேம்படுத்துவதிலும் அடிப்படை மதிப்புகளை ஆதரிப்பதிலும் அனைவரும் ஒற்றுமையாக நிற்கிறார்கள் என்பதற்கு இந்திய பாடல்கள் தடை செய்யப்பட்டுள்ளது சான்றாகும் என்று அவர் கூறியுள்ளார்.
இதேவேளை, பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து பாகிஸ்தான் நடிகர் ஃபவாத் கான் நடித்த ‘அபிர் குலால்’ திரைப்படம் இந்தியாவில் வெளியிடப்படாது என்று மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்திருந்தன.
பாகிஸ்தானுக்கு எதிராக நாடு தழுவிய போராட்டங்களுக்கு மத்தியில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.