2025 மார்ச் மாதத்தில் இலங்கையின் ஏற்றுமதி வருவாய் மற்றும் வெளிநாட்டு பணம் அனுப்புதலில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பட பதிவு செய்யப்பட்டுள்ளது.
இலங்கை மத்திய வங்கி (CBSL) வெளியிட்டுள்ள அண்மைய தரவுகளின்படி, குறித்த மாதத்திற்கான ஏற்றுமதி வருவாய் 1,242 மில்லியன் அமெரிக்க டொலர்களை எட்டியுள்ளது.
இது 2024 மார்ச் மாதத்துடன் ஒப்பிடும்போது 8.1% அதிகரிப்பைக் குறிக்கிறது.
இறக்குமதி செலவினமும் இதேபோன்ற மேல்நோக்கிய போக்கைக் கண்டது.
அது ஆண்டுக்கு ஆண்டு 8.6% அதிகரித்து 1,637 மில்லியன் அமெரிக்க டொலர்களாக உள்ளது.
இலங்கையின் வரலாற்றில் மார்ச் மாதத்தில் பதிவு செய்யப்பட்ட அதிகபட்ச தொகையான மார்ச் மாதத்தில் 693 மில்லியன் அமெரிக்க டொலர்களாக இருந்த தொழிலாளர்களின் பண அனுப்பீடுகளின் அதிகரிப்பு CBSL அறிக்கையில் ஒரு முக்கிய சிறப்பம்சமாகும்.
பண அனுப்புதல்களின் அதிகரிப்பு நாட்டின் அந்நிய செலாவணி இருப்பு மற்றும் கொடுப்பனவு சமநிலைக்கு ஒரு நேர்மறையான அறிகுறியாகக் கருதப்படுகிறது.
சுற்றுலாவும் மீட்சியைத் தொடர்ந்தது, மார்ச் மாதத்தில் அதன் வருவாய் 354 மில்லியன் அமெரிக்க டொலர்களை எட்டியது.
இந்த மாதத்தில் மொத்தம் 229,298 சுற்றுலாப் பயணிகளின் வருகை பதிவு செய்யப்பட்டுள்ளது.
எனினும், 2025 ஜனவரி முதல் ஏப்ரல் இறுதி வரை அமெரிக்க டொலருக்கு எதிராக இலங்கை ரூபாயின் மதிப்பு 2.3% சரிவினை கொண்டிருந்தாக மத்திய வங்கி குறிப்பிட்டுள்ளது.