குற்றச் செயல்களின் வரும்படிகள் சட்டமூலத்தின் சான்றிதழை சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன இன்று (02) பாராளுமன்றத்தில் கையொப்பமிட்டு நடைமுறைப்படுத்தினார்.
இதேவேளை சபாநாயகர், குற்றச் செயல்களின் வரும்படிகள் சட்டமூலத்தில் நேற்றுமுன்தினம் (30) தனது கையொப்பத்தையிட்டு சான்றுரைப் படுத்தினார்.
குற்றச் செயல்களின் வரும்படிகள் சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் கடந்த ஏப்ரல் 8ஆம் திகதி நடைபெற்றதுடன் இரண்டாம் வாசிப்பு விவாதத்திற்குப் பிறகு, மசோதா குழுநிலையில் பரிசீலிக்கப்பட்டது.
அதன்பின்னர் , மூன்றாம் வாசிப்புக்குப் பிறகு, சட்டமூலம் வாக்கெடுப்பு இல்லாமல் மற்றும் திருத்தங்கள் இல்லாமல் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.
குறித்த சட்டமூலம் முதலாவது மதிப்பீட்டுக்காக கடந்தக மார்ச் மாதம் 01ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இந்தச் சட்டமூலம் 2025ஆம் ஆண்டின் 05ஆம் இலக்க குற்றச் செயல்களின் வரும்படிகள் சட்டமாக அமுலுக்கு வருகின்றது.