தென்மேற்கு சீனாவில் பலத்த காற்று காரணமாக நான்கு சுற்றுலாப் படகுகள் கவிழ்ந்ததில் குறைந்தது 10 பேர் உயிரிழந்துள்ளனர்.
மேலும், இந்த சம்பவத்தில் 70 பேர் மீட்கப்பட்டு வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஞாயிற்றுக்கிழமை (04) குய்சோவின் கியான்சி நகரில் உள்ள ஆற்றில் திடீரென வீசிய பலத்த காற்று காரணமாக படகுகள் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இதனால், அதில் பயணித்த 84 பேர் நீரில் மூழ்கியதாக அந் நாட்டு ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
திங்கட்கிழமை காணாமல் போன ஒருவரின் உடல் கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து, இறப்பு எண்ணிக்கை ஒன்பதில் இருந்து 10 ஆக உயர்ந்தது.
சீனா தனது வார இறுதி மே தின விடுமுறையைக் கொண்டாடியபோது இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
இது சுற்றுலா பயணத்திற்கான உச்ச பருவமாகும்.