காஷ்மீரின் இமயமலைப் பகுதியில் உள்ள இரண்டு நீர்மின் திட்டங்களில் நீர்த்தேக்கத் திறனை அதிகரிக்கும் பணிகளை இந்தியா தொடங்கியுள்ளதாக நம்பகத் தகுந்த வட்டாரங்களை மேற்கொள்ளிட்டு ரொயட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
பாகிஸ்தானுடனான புதிய பதற்றம் காரணமாக நீர் பகிர்வு ஒப்பந்தத்தை இடைநிறுத்த வழிவகுத்ததைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை வந்துள்ளது.
1960 ஆம் ஆண்டு முதல் அணு ஆயுதப் போட்டியாளர்களுக்கு இடையே மூன்று போர்கள் மற்றும் பல மோதல்கள் இருந்தபோதிலும், சிந்து நதி நீர் ஒப்பந்தத்தின் கீழ் உள்ள விதிமுறைகளுக்கு வெளியே செயல்பட இந்தியா எடுத்த முதல் உறுதியான படியை இந்தப் பணி பிரதிபலிக்கிறது.
எனினும், கடந்த மாதம், காஷ்மீரில் நடந்த தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, பாகிஸ்தானின் 80% பண்ணைகளுக்கு விநியோகத்தை உறுதி செய்யும் ஒப்பந்தத்தை புது டெல்லி நிறுத்தி வைத்தது.
மேலும் தாக்குதல் நடத்திய மூன்று பேரில் இருவர் பாகிஸ்தானியர்கள் என்று அது அடையாளம் கண்டது.
இந்த இடைநிறுத்தம் தொடர்பாக சர்வதேச சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று இஸ்லாமாபாத் அச்சுறுத்தியுள்ளது.
மேலும் தாக்குதலில் எந்தப் பங்கையும் மறுத்துள்ளது.
“பாகிஸ்தானுக்குச் சொந்தமான நீரின் ஓட்டத்தைத் தடுக்க அல்லது திசைதிருப்ப எந்தவொரு முயற்சியும் … ஒரு போர்ச் செயலாகக் கருதப்படும்” என்று எச்சரித்துள்ளது.
இந்தியாவின் இந்த நடவடிக்கை பாகிஸ்தானுக்கு விநியோகத்தை அச்சுறுத்தாது.
ஏனெனில் அது இந்தியாவின் வழியாக பாயும் ஆறுகளையே அதிக அளவில் சார்ந்துள்ளது.
ஆனால், மற்ற திட்டங்கள் இதேபோன்ற முயற்சிகளைத் தொடங்கினால் அது இறுதியில் பாதிக்கப்படலாம்.
இந்த பிராந்தியத்தில் இதுபோன்ற பல திட்டங்கள் உள்ளன.
1947 இல் ஐக்கிய இராஜ்ஜிய காலனித்துவ ஆட்சியிலிருந்து சுதந்திரம் பெற்றதிலிருந்து, இந்தியாவும் பாகிஸ்தானும் காஷ்மீர் தொடர்பாக தங்கள் மூன்று போர்களில் இரண்டை நடத்தியுள்ளன.
மேலதிகமாக ஏராளமான குறுகிய மோதல்களும் நடந்துள்ளன.