2025 இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் இன்று (05) நடைபெறும் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (SRH) அணியும், டெல்லி கேபிட்டல்ஸ் (DC) அணியும் மோதவுள்ளன.
நடப்பு ஐ.பி.எல். தொடரின் 56 ஆவது போட்டியானது ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் இன்றிரவு 07.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.
லீக் கட்டத்தில் இன்னும் சில போட்டிகள் மட்டுமே மீதமுள்ள நிலையில், இந்த ஆட்டத்தில் இரு அணிகளும் சிறப்பாக செயல்பட வேண்டிய அழுத்தத்தில் உள்ளன.
DC இன்னும் பிளேஆஃப் பந்தயத்தில் உள்ளது.
12 புள்ளிகளுடன் ஐந்தாவது இடத்தில் அவர்கள் உள்ளனர்.
ஆனால் அண்மைய தோல்விகள் அதன் வேகத்தை குறைத்துள்ளன.
இதற்கிடையில், SRH, மற்றொரு தோல்விக்குப் பின்னர் வெளியேற்றத்தின் விளிம்பில் உள்ளது.
06 புள்ளிகளுடன் தவரிசையில் அவர்கள் எட்டாவது இடத்தில் உள்ளனர்.
இந்த நிலையில் இன்றைய போட்டியில் இரு அணிகளும் மீண்டும் எழுச்சி பெற ஆர்வமாக இருக்கும்.