ஜேர்மனியின் புதிய சேன்ஸலராக பிரெட்ரிக் மெர்ஸ் இன்று பதவியேற்கவுள்ளார். ஜேர்மனியில் கடந்த பெப்ரவரி மாதம் தேர்தல் முடிவடைந்த போதிலும் கூட்டணி பேச்சுவார்த்தைகள் முதலான சில காரணங்களால் ஆட்சியமைப்பதில் தாமதம் ஏற்பட்டுவந்தது.
இந்நிலையில், 208 இருக்கைகளை வென்ற CDU/CSU கட்சியும், 120 இருக்கைகளை வென்ற SPD கட்சியும் இணைந்து ஆட்சி அமைக்க முடிவு செய்துள்ளன.
அந்தவகையில் இன்று ஜேர்மனியில் புதிய அரசு ஆட்சி அமைக்க உள்ளது. உள்ளூர் நேரப்படி இன்று காலை 9.00 மணிக்கு ஜேர்மனியின் நாடாளுமன்றம் கூடுகிறது.
பிரெட்ரிக் மெர்ஸின் பெரும்பான்மையை நிரூபிக்க வாக்கெடுப்பு நடத்தப்படும் நிலையில், ஜனாதிபதி அதை உறுதி செய்ய, மெர்ஸ் ஜேர்மனியின் 10ஆவது சேன்ஸலராக பதவியேற்க இருக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.