இலங்கை சினிமாத்துறையை சேர்ந்த பிரபல நடிகையான சேமினி இத்தமல்கொட பொலிசாரால் இன்று கைது செய்யப்பட்ட நிலையில் இன்று பிற்பகல் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
வெலிக்கடை பொலிஸ் பிரிவினாரல் இன்று கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
நிதி மோசடி சம்பவத்துடனான நிலுவையில் உள்ள 7 பிடியாணைகள் தொடர்பிலேயே அவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
தங்காலை, மாத்தறை மற்றும் கொழும்பு நீதிமன்றங்கள், இவருக்கு எதிராகப் பிடியாணை உத்தரவினை பிறப்பித்துள்ளன.
இந்நிலையில் கைது செய்யப்பட்ட சேமினி இத்தமல்கொட இன்று(11) கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.














