இப்பருவகாலத்திற்கான லாலிகா கால்பந்தாட்ட தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. அந்தவகையில் இன்னும் சில போட்டிகள் எஞ்சியுள்ள நிலையில் முன்னனி கழகமான பார்சிலோனா கழகம் வெற்றியை பதிவு செய்து சம்பியன் பட்டத்தை கைப்பற்றி அசத்தியுள்ளது.
பார்சிலோனா மற்றும் எஸ்பன்யோல் அணிகளுக்கிடையிலான போட்டி பார்சிலோனா அணியின் சொந்த மைதானமான ஆர்.சி.டி.இ மைதானத்தில் ரசிகர்களின் ஆர்பரிப்புடன் ஆரம்பமாகியது. இப்போட்டியில் பார்சிலோனா அணி வெற்றிபெற்றால் புள்ளிகளின் அடிப்படையில் இப்பருவகாலத்தின் சம்பியன் பட்டத்தை வெற்றிக்கொள்ளும் என்பதால் ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருந்தனர்.
போட்டி தொடங்கியதிலிருந்தே விறுவிறுப்பாக சென்றுகொண்டிருந்த நிலையில் முதல் பாதியில் இரு அணிகளும் கோல் எதனையும் பதிவு செய்யவில்லை. இந்நிலையில் இரண்டாவது பாதி ஆட்டம் தொடங்கியதும் பார்சிலோனா அணியின் லாமின் யமால் 53வது நிமிடத்தில் பாரிசிலோனா அணியின் முதல் கோலினை பதிவு செய்து அசத்தினார். 1-0 என அவ்வணி முன்னிலைப்பெற்ற நிலையில் எஸ்பன்யோல் அணி பல முயற்சிகளை மேற்கொண்டது போட்டியை சமப்படுத்த அது எதுவுமே பலனளிக்கவில்லை.
இந்நிலையில் போட்டி நிறைவுபெற்று மேலதிகமாக 5 நிமிடம் வழங்கப்பட்ட நிலையில் அதனை தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்ட பேமின் லோபஸ் பார்சிலோனா அணியின் இரண்டாவது கோலினை பதிவு செய்து 2-0 என வெற்றியைப்பதிவு செய்து போட்டியை வெற்றிக்கொண்டதுடன் 2024 மற்றும் 2025 பருவகாலத்திற்கான சம்பியன் பட்டத்தை தனதாக்கி அசத்தியது.
இதுவரை 36 போட்டிகளில் விளையாடியுள்ள பார்சிலோனா அணி 27 போட்டிகளில் வெற்றிப்பெற்று 85 புள்ளிகளை பெற்று புள்ளிகளின் அடிப்படையில் சில போட்டிகள் எஞ்சியுள்ள நிலையிலேயே சம்பியன் பட்டத்தை கைப்பற்றி அசத்தியுள்ளது.