இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் மாத்திரம் 975பேர் வாகன விபத்துகளில் உயிரிழந்துள்ளதாக இலங்கை மருத்துவ சங்கம் தெரிவித்துள்ளது.
வாகனத்தை செலுத்தும் போது சாரதிகளுக்கு ஏற்பட்ட நித்திரை கலக்கத்தினாலேயே அதிக விபத்துக்கள் ஏற்பட்டுள்ளதாக அந்த சங்கத்தின் தலைவர் வைத்தியர் சுரந்த பெரேரா தெரிவித்துள்ளார்.
இதேவேளை, வாகனங்களை செலுத்தும் போது நித்திரை அல்லது களைப்பு ஏற்படும் சந்தர்ப்பங்களில் வாகனத்தை சுமார் 20 நிமிடம் நிறுத்தி, ஓய்வெடுத்ததன் பின்னர் மீண்டும் பயணிக்குமாறும் அவர் வாகன சாரதிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
அதேபோல் நீண்ட தூர பகுதிகளுக்கு பயணிக்கும் போது குறைந்தபட்சம், ஒன்று அல்லது இரண்டு மணித்தியாலங்களுக்கு ஓய்வெடுக்குமாறும் இலங்கை மருத்துவ சங்கத்தின் தலைவர் வைத்தியர் சுரந்த பெரேரா தெரிவித்துள்ளார்.