விஜய் ஆண்டனி இசையமைப்பாளராக அறிமுகமாகி பின்னர் நான் திரைப்படம் மூலம் நடிகராக மக்கள் மனதில் இடம்பிடித்த்துடன் அதை தொடர்ந்து அவர் பல படங்களிலும் நடித்துள்ளார்.
இவரது நடிப்பில் உருவான ‘பிச்சைக்காரன்’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை கொடுத்த நிலையில் இவரது நடிப்பில் அண்மையில் வெளியான ரோமியோ, மழை பிடிக்காத மனிதன், மற்றும் ஹிட்லர் போன்ற திரைப்படங்கள் மக்களிடையே கலவையான விமர்சனங்களை பெற்றன.
இதனையடுத்து, லியோ ஜான் பால் இயக்கும் புதிய திரைப்படத்தில் விஜய் ஆண்டனி நடித்து வருகிறார்.
இந்த படத்தில் விஜய் ஆண்டனியுடன், அஜய் தீஷன், சமுத்திரக்கனி, மகாநதி சங்கர், பிரிகடா, வினோத் சாகர் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர்.
விஜய் ஆண்டனி இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளதுடன் விஜய் ஆண்டனி ஃபிலிம் கார்பரேஷன் இப்படத்தை தயாரிக்கிறது.
இந்நிலையில் இப்படத்திற்கு ‘மார்கன்’ என பெயரிடப்பட்டுள்ளது.
இந்த படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய ஐந்து மொழிகளில் ஜுன் 27ம் திகதி வெளியாகிறது.
இதை தொடர்ந்து விஜய் ஆண்டனி ‘சக்தித் திருமகன்’ எனும் படத்திலும் நடித்து வருவதுடன் இதனையடுத்து, ஜோசுவா சேதுராமன் இயக்கத்தில் நடிகர் விஜய் ஆண்டனி புதிய படம் ஒன்றிலும் நடிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இப்படத்தை விஜய் ஆண்டனி ஃபிலிம் கார்பரேஷன் தயாரிக்கிறது. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று (மே 19) வெளியாகும் என படக்குழு அறிவித்தது.
அதன்படி, இப்படத்தின் ஃபர்ஸ் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.
அதன்படி, இப்படத்திற்கு ‘Lawyer’ என பெயரிடப்பட்டுள்ளது. இந்த திரைப்படம் விஜய் ஆண்டனியின் 26ஆவது திரைப்படமாகும்.
மேலும், இப்படத்தின் படப்பிடிப்பு எதிர்வரும் ஜுன் மாதம் ஆரம்பமாகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
படத்தின் பெயரை வைத்து பார்க்கும்போது இப்படத்தில் விஜய் ஆண்டனி வழக்கறிஞராக நடிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.