தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் கமல்ஹாசன். இவர் நடிப்பில் கடந்தாண்டு வெளியான இந்தியன் 2 திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறாமல் கலவையான விமர்சனம் பெற்றது.
தற்போது கமல்ஹாசன் நடிப்பில் இந்தியன்-3, மற்றும் கல்கி-2 ஆகிய திரைப்படங்கள் உருவாகி வருகின்றன.
இதனைத் தொடர்ந்து கமல்ஹாசன் – மணிரத்னம் கூட்டணியில் கடந்தாண்டு துவங்கப்பட்ட திரைப்படம் தக் லைஃப்.
கேங்ஸ்டர் பின்னணியில் எழுதப்பட்ட இக்கதையின் படப்பிடிப்பு சென்னை, டெல்லி, ரஷ்யா, பாண்டிச்சேரி உள்ளிட்ட பல பகுதிகளில் நடைபெற்றது.
கமல்ஹாசன், நாசர், சிலம்பரசன், ஜோஜூ ஜார்ஜ், அசோக் செல்வன், ஐஸ்வர்யா லட்சுமி என பலரும் நடித்துள்ளதால் தக் லைஃப் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இப்படத்தின் முதல் பாடலான ஜிங்குச்சா பாடல் சமீபத்தில் வெளியாகி அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.
இதன் அடுத்த அப்டேட் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துவந்த நிலையில் சமீபத்தில் இப்படத்தின் டிரெய்லர் வெளியாகி கவனம் பெற்றது.
இந்த நிலையில், இப்படத்தில் செகண்ட் சிங்கிளான ‘Sugar Baby’ பாடல் நாளை மறுதினம் (மே 21) வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.