2025 இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி ஜானி பேர்ஸ்டோவ், ரிச்சர்ட் க்ளீசன் மற்றும் சரித் அசலங்க ஆகியோரை ஒப்பந்தம் செய்துள்ளது.
மும்பை அணியின் கடைசி லீக் ஆட்டத்திற்குப் பின்னர் தேசிய போட்டிகளுக்காகச் செல்லத் தயாராக இருக்கும் வில் ஜாக்ஸ், ரியான் ரிக்கல்டன் மற்றும் கார்பின் போஷ் ஆகியோருக்குப் பதிலாக மேற்கண்ட வீரர்களை MI அணி தேர்ந்தெடுத்துள்ளது.
ஜாக்ஸுக்குப் பதிலாக இங்கிலாந்து விக்கெட் காப்பாளரும் துடுப்பாட்ட வீரருமான ஜானி பேர்ஸ்டோவ் 5.25 கோடி இந்திய ரூபாய் விலையில் அணியுடன் இணைவார்.
இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ரிச்சர்ட் க்ளீசன் ரியான் ரிக்கெல்டனுக்கு பதிலாக 1 கோடி இந்திய ரூபாய் விலையில் களமிறங்குவார்.
இலங்கை நட்சத்திரம் சரித் அசலங்க 75 இலட்சம் இந்திய ரூபாய் விலையில் கார்பின் போஷுக்கு பதிலாக அணியில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளார்.
MI தகுதி பெற்றால், பிளேஆஃப் நிலையிலிருந்து மாற்று வீரர்கள் விளையாடுவார்கள்.