பாகிஸ்தானுடனான மோதலைத் தொடர்ந்து இந்திய அரசு மத்திய கிழக்கு நாடுகளுடன் தனது பொருளாதார உறவுகளை ஆழப்படுத்தி வருகின்றது.
அந்தவகையில் தனது பழைய நட்பு நாடான ஓமனுடன் விரைவில் ஒரு சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திடவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியா – ஓமன் சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்திற்கான பேச்சுவார்த்தைகள் கிட்டத்தட்ட நிறைவடைந்துவிட்டன எனவும் மேலும், இந்த மாதமே அறிவிப்பு வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கட்டார் போன்ற பிற வளைகுடா நாடுகளுடன் இதேபோன்ற ஒப்பந்தங்களை இந்தியா தீவிரமாக பரிசீலித்து வருகிறது.
கடந்த பெப்ரவரியில் இந்தியாவுக்கு வருகை தந்த கட்டாரின் அமிர் இந்தியாவில் பெரிய முதலீடுகளைச் செய்ய விரும்புவதாக தெரிவித்தார் இந்தியா – பாகிஸ்தான் மோதலின் போது கத்தார் நடுநிலை வகித்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவின் முக்கிய இறக்குமதிகளில் பெட்ரோலிய பொருட்கள் மற்றும் யூரியா ஆகும். இவை இறக்குமதி செலவில் 70% க்கும் அதிகமாகும்.
அதேபோல் கட்டாருடன் 14,500 கோடி ரூபாய் ஏற்றுமதியும், ஒரு லட்சத்து ஐந்தாயிரம் கோடி இறக்குமதியும் செய்கிறது.
இந்தியா கத்தாரிலிருந்து மிகப்பெரிய அளவில் திரவமயமான இயற்கை வாயுவை இறக்குமதி செய்கிறது. இது இந்தியாவின் சக்தி தேவையை பூர்த்தி செய்ய முக்கிய பங்கு வகிக்கிறது.
இயற்கை வாயுவுடன் சேர்த்து, கச்சா எண்ணெய் மற்றும் அதனுடன் தொடர்புடைய பிற எரிபொருட்களும் இறக்குமதி செய்யப்படுகின்றன.
ஐக்கிய அரபு அமீரகத்துடன் இந்தியா மூன்று லட்சம் கோடி ரூபாய் ஏற்றுமதியும் நான்கு லட்சம் கோடி ரூபாய் இறக்குமதியும் செய்கிறது.
இந்தியா, ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து அதிக அளவில் தங்கம் மற்றும், அலங்கரிக்கப்பட்ட நகைகள், வைரங்கள் மற்றும் விலையுயர்ந்த கற்கள் ஆகியவற்றை இறக்குமதி செய்கின்றமை குறிப்பிடத்தக்கது.