பதுளை தெயியனாவெலவை பிரதேசத்தை சேர்ந்த சகோதரர்களுக்கிடையில் ஏற்பட்ட குடும்ப தகராறு காரணமாக தம்பி மீது அண்ணன் சரமாரியாக வாள்வெட்டு தாக்குதல் நடத்திய சம்பவம் ஒன்று பதுளை நகரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பதுளை நகர மையத்தில் மணிக்கூட்டு கோபுரத்திற்கு அருகாமையில் நேற்று மாலை(20), ஒரு சகோதரர் தனது தம்பிமீது சுமார் பத்து நிமிடங்கள் வாள்வெட்டு தாக்குதல் நடத்தி காயப்படுத்தியுள்ளார்.
குறித்த வாள் வெட்டு தாக்குதல்களின் படுகாயமடைந்த நபர் உடல் முழுவதும் பல வெட்டு காயங்களுடன் பதுளை மாகாண வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவம் தொடர்பாக, பதுளை மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸார் மற்றும் குற்ற தடவியல் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.