இந்தோனேசியாவுடன் இணைந்து பணியாற்ற சீனா தயாராக உள்ளதாக பிரதமர் லி கியாங் தெரிவித்துள்ளார்.
ஒத்துழைப்பை வலுப்படுத்தவும், சுயாதீன ஒத்துழைப்பின் கட்டமைப்பை மேலும் ஒருங்கிணைக்கவும், அபாயங்கள் மற்றும் சவால்களை கூட்டாக எதிர்கொள்ளவும், பொதுவான வளர்ச்சியை மேம்படுத்தவும் இந்தோனேசியாவுடன் இணைந்து பணியாற்ற சீனா தயாராக உள்ளது என சீனாவின் பிரதமர் லி கியாங் தெரிவித்துள்ளார்.
ஜகார்த்தாவில் இந்தோனேசிய அதிபர் பிரபோவோ சுபியாண்டோவுடனான சந்திப்பின்போதே அவர் இந்த கருத்துக்களை தெரிவித்தார்.