தென் கொரிய கடற்படை ரோந்து விமானம் ஒன்று, நான்கு பேருடன், தெற்கு நகரமான போஹாங்கில் அமைந்துள்ள இராணுவ தளத்திற்கு அருகே வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
விபத்து நடந்த இடத்தில் இருந்து ஒரு பெரிய புகை மூட்டம் வான் நோக்கி எழும் புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளன.
வியாழக்கிழமை (29) பிற்பகல் விபத்துக்குள்ளானது P-3 விமானம்தான் என்பதை தென் கொரிய கடற்படை உறுதிப்படுத்தியுள்ளது.
அந் நாட்டு நேரப்படி பிற்பகல் 1:50 மணிக்கு இந்த விபத்து நடந்ததாக தென் கொரிய செய்தி நிறுவனமான யோன்ஹாப் தெரிவித்துள்ளது.
விபத்து நடந்த இடத்தில் அவசரகால பணியாளர்கள் தற்போது தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
விபத்துக்கான காரணத்தை கடற்படை இன்னும் கண்டறியவில்லை.
அதேநேரம், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையையும் அது உறுதிப்படுத்தவில்லை.















