பாகிஸ்தானின் பயங்கரவாத செயல்களுக்கு ஆதரவு வழங்கியமையினால் துருக்கி ஏர்லைன்ஸ் நிறுவனத்துடனான விமான ஒப்பந்தத்தை நீட்டிக்க மத்திய அரசு மறுத்துவிட்டது.
ஒப்பந்தத்தை ரத்து செய்யுமாறும் இண்டிகோ நிறுவனத்தை இந்தியாவின் மத்திய அரசு கோரிக்கைவிடுத்துள்ளது.
பஹல்காம் தாக்குதலுக்கு எதிராக இந்தியா மேற்கொண்ட ஒபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு பின்னர், அந்நாட்டில் செயல்பட்டு வரும் பயங்கரவாத முகாம்கள் அழிக்கப்பட்டதுடன் 100க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.
ஒபரேஷன் சிந்தூருக்கு பதிலடியாக எல்லையில் உள்ள கிராமங்களை நோக்கி பாக்கிஜ்தான் ராணுவம் நடத்திய பல தாக்குதல்களை இந்தியா முறியடித்த நிலையில் இந்தியா மீதான தாக்குதல்களின் போது பாகிஸ்தானுக்கு அதிக அளவில் ட்ரோன்களை வழங்கி துருக்கி உதவி செய்தமையினாலேயே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.