அமெரிக்க சிறப்புத் தூதர் ஸ்டீவ் விட்காஃப் முன்வைத்த காசா போர் நிறுத்த திட்டத்தை ஏற்றுக்கொள்ளுமாறு ஹமாஸை இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் காட்ஸ் வலியுறுத்தியுள்ளார்.
இல்லையெனில் ஹமாஸ் அழிவை சந்திக்க நேரிடும் எனவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மேலும் ஹமாஸ் போர் நிறுத்த ஒப்பந்தத்தை ஏற்றுக்கொள்ளும் வரை காசாவில் இஸ்ரேலின் இராணுவ நடவடிக்கைகள் முழு பலத்துடன் தொடரும் என்றும், ராணுவ வீரர்களைப் பாதுகாக்கும் நோக்கில் இஸ்ரேல் கடுமையான வான், தரை மற்றும் கடல்வழி தாக்குதல்களை தொடரும் எனவும் இஸ்ரேல் காட்ஸ் வலியுறுத்தியுள்ளார்.
காசாவில் போர் நிறுத்தம் மேற்கொள்வதற்காக அமெரிக்கா முன்வைத்த புதிய செயல்திட்டத்தை இஸ்ரேல் ஏற்றுக்கொண்டுள்ள நிலையில், ஹமாஸும் போர் நிறுத்த ஒப்பந்தத்தை ஏற்றுகொள்ள வேண்டும் என இஸ்ரேல் தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.



















