சிங்கப்பூரை தளமாகக் கொண்ட குறைந்த கட்டண விமான நிறுவனமான ஜெட்ஸ்டார் ஆசியா (Jetstar Asia) ஜூலை 31 அன்று அதன் செயல்பாடுகளை நிறுத்தவுள்ளது.
பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு முழு கட்டணமும் திரும்ப வழங்கப்படும் என்று விமான நிறுவனம் கூறியுள்ளது.
இந்த மூடல் காரணமாக சிங்கப்பூரில் 500க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்படுவார்கள்.
ஜெட்ஸ்டார் ஆசியாவின் மூடல் அவுஸ்திரேலியாவை தளமாகக் கொண்ட ஜெட்ஸ்டார் ஏர்வேஸின் செயல்பாடுகளையோ அல்லது ஜெட்ஸ்டார் ஜப்பானின் செயல்பாடுகளையோ பாதிக்காது என்று அதன் பகுதி உரிமையாளரான குவாண்டாஸ் தெரிவித்துள்ளது.
ஜெட்ஸ்டார் ஆசியா அடுத்த ஏழு வாரங்களுக்கு படிப்படியாகக் குறைக்கப்பட்ட சேவையை வழங்கும்.
மேலும், பயணிகளின் விமானம் பாதிக்கப்பட்டால் அவர்களுக்கு அறிவிக்கப்படும்.
ஜூலை 31 மூடலுக்குப் பின்னர் விமானத்தில் பயணிக்க பயணச்சீட்டுகள் உள்ள பயணிகளை விமான நிறுவனம் தொடர்பு கொள்ளும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட சில வாடிக்கையாளர்கள் குவாண்டாஸ் குழுமத்தால் இயக்கப்படும் மாற்று விமானங்களுக்கு மாற்றப்படலாம்.
பயண முகவர் அல்லது தனி விமான நிறுவனம் மூலம் முன்பதிவு செய்தவர்கள் அந்த வழங்குநர்களை நேரடியாகத் தொடர்பு கொள்ளுமாறு ஜெட்ஸ்டார் ஆசியா அறிவுறுத்துகிறது.
சிங்கப்பூரிலிருந்து மலேசியா, இந்தோனேசியா மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய இடங்களுக்குச் செல்லும் விமானங்கள் உட்பட ஆசியா முழுவதும் 16 வழித்தடங்கள் மூடலால் பாதிக்கப்படும்.
குவாண்டாஸ் ஆசியாவில் வளர்ந்து வரும் குறைந்த கட்டண விமானப் பயணச் சந்தையில் கால் பதிக்க முயன்றதால், 2004 ஆம் ஆண்டு ஜெட்ஸ்டார் ஆசியா தொடங்கப்பட்டது.
எனினும், ஏர் ஏசியா மற்றும் ஸ்கூட் உள்ளிட்ட பிற குறைந்த கட்டண விமான சேவைகளின் அதிரித்த போட்டியை அது எதிர்கொண்டது.