ஐசிசி டெஸ்ட் சம்பியன்ஸிப் தொடரின் இறுதிப்போட்டி இன்று லண்டன் லோரட்ஸ் மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளது. இறுதிப்போட்டியில் நடப்பு சம்பியன் அவுஸ்ஆரேலியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் மோதுகின்றன. ஐ.சி.சி. எனும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் கடந்த 2019-ம் ஆண்டு உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் என்ற தொடரை அறிமுகப்படுத்தியது. இதன் முதலாவது பருவகாலத்தில் நியூசிலாந்து அணியும், 2-வது பருவகாலத்தில் ஆஸ்திரேலியா அணியும் கிண்ணத்தை கைப்பற்றின. இந்த இரு தொடரிலும் இந்திய அணி 2-வது இடத்தை பெற்றது.
தற்போது நடைபெற உள்ள 3-வது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் நடப்பு சம்பியன் ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதுகின்றன. இந்தப் போட்டி லண்டன் லோர்ட்சில் இன்று மதியம் 3 மணிக்கு ஆரம்பமாகின்றது.
கடந்த ஒரு வாரமாக இரு அணி வீரர்களும் தீவீர பயிற்சி மேற்கொண்டனர். ஐ.சி.சி. கிண்ணத்தை வெல்ல நீண்ட காலமாக போராடி வரும் தென் ஆப்பிரிக்க அணியும், கிண்ணத்தை தக்க வைக்க ஆவுஸ்திரேலிய அணியும் மோத உள்ளதால் இந்த போட்டி எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.
இந்நிலையில் இன்றைய இறுதிப்போட்டிக்கான ஆடும் 11 பேரை ஆஸ்திரேலியா அணி அறிவித்துள்ளது .
அதன்படி உஸ்மான் கவாஜா, மார்னஸ் லபுஷன்க், கேமரூன் கிரீன், ஸ்டீவ் ஸ்மித், டிரவிஸ் ஹெட் , பியூ வெப்ஸ்டர், அலெக்ஸ் கேரி, பேட் கம்மின்ஸ் ,மிட்செல் ஸ்டார்க், நதன் லியோன், ஜோஷ் ஹேசில்வுட் ஆகியோரும் களமிறங்குகின்றனர்.
தென் ஆப்பிரிக்க அணியில் டெம்பா பவுமா அணித்தலைவரானதன் பிறகு டெஸ்ட் கிரிக்கெட்டில் புத்தெழுச்சி பெற்றுள்ளது. தலைவர் டெம்பா பவுமா வின் கீழ் தென்னாப்பிரிக்கா அணி இதுவரை டெஸ்ட் கிரிக்கெட்டில் தோல்வியே அடையவில்லை. அந்த பெருமையுடன் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கான ஆடும் 11 பெயரை தென்னாப்பிரிக்கா அணியும் அறிவித்துள்ளது.
இதன்படி அவ்வணியில் ஐடன் மார்க்ரம், ரியான் ரிக்கெல், வியான் முல்டர், டெம்பா பவுமா, டிரிஸ்டன் ஸ்டப்ஸ், டேவிட் பெடிங்ஹாம், கைல் வெர்ரின், மார்கோ ஜோன்சன், கேசவ் மகாராஜ், ககிசோ ரபாடா, லுங்கி நிகிடி ஆகியோர் இன்றைய தினம் களமிறங்கவுள்ளனர்.


















