வீடுகளின் நெருக்கடிக்கு மத்தியில் அவுஸ்திரேலியாவில் முதன் முறையாக ஒரு வீட்டின் சராசரி விலை 1 மில்லியன் அவுஸ்திரேலிய டொலர்களை ($652,000; £483,000) விஞ்சியுள்ளது.
இந்த வாரம் அவுஸ்திரேலிய புள்ளிவிவர பணியகம் (ABS) வெளியிட்ட தகவலின்படி மார்ச் காலாண்டில் சராசரி வீட்டின் மதிப்பு A$1,002,500 ஆக இருந்ததாக மதிப்பிடுகிறது.
இது முந்தைய காலாண்டை விட 0.7% அதிகமாகும்.
வீடுகள் பற்றாக்குறை, அதிகரித்து வரும் மக்கள் தொகை, சொத்து முதலீட்டாளர்களுக்கு வரி சலுகைகள் மற்றும் சமூக வீட்டுவசதிகளில் போதுமான முதலீடு இல்லாதது ஆகியவை இந்த நெருக்கடிக்குக் காரணம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
நாட்டின் அதிக மக்கள் தொகை கொண்ட மாநிலமான நியூ சவுத் வேல்ஸ் (NSW), சராசரியாக மிகவும் விலையுயர்ந்த வீடுகளைக் கொண்டுள்ளது.
இது A$1.2 மில்லியன் ஆகும்.
அதைத் தொடர்ந்து குயின்ஸ்லாந்து A$945,000 ஆகும் என்று ABS தெரிவித்துள்ளது.
மார்ச் காலாண்டில் அனைத்து மாநிலங்கள் மற்றும் பிரதேசங்களிலும் வீடுகளின் சராசரி விலை உயர்ந்தாலும், அதன் வருடாந்திர வளர்ச்சி விகிதம் குறைந்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
அவுஸ்திரேலியாவின் 11.3 மில்லியன் குடியிருப்புகளை இந்த புள்ளிவிவரங்கள் எடுத்துக்கொள்கின்றன.
இதில் தனி வீடுகள் முதல் மொட்டை மாடி வீடுகள் மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகள் வரை சொத்து வகைகளின் முழு வரம்பும் அடங்கும்.
இது தவிர, அண்மைய ஆண்டுகளில் விடுகள் வாடகைக்கு கிடைப்பதும் அங்கு ஒரு பிரச்சனையாக உள்ளது.
மேலும் தேவையை பூர்த்தி செய்ய போதுமான வீடுகளும் இல்லை என்றும் தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, பிரித்தானியாவில் ஒரு வீட்டின் சராசரி விலை அவுஸ்திரேலியாவின் விலையில் (A$560,000; £270,000) பாதியாக உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
















