ஹங்கேரியின் தலைநகர் புடாபெஸ்ட் நகரில் பிரதமர் விக்டோர் ஓர்பானின் அரசாங்கத்துக்கு எதிராக சுமார் 15,000 க்கும் மேற்பட்டோர் ஒன்று திரண்டு நேற்றைய தினம் மாபெரும் போராட்டமொன்றினை முன்னெடுத்திருந்தனர்.
நாட்டில் இடம்பெற்று வரும் ஊழல் செயற்பாடுகள் மற்றும் LGBTQ+ சமூகத்தினருக்கு எதிரான அரசின் நடவடிக்கைகளைக் கண்டித்து இப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் , அரசாங்கம் தமது ஜனநாயக உரிமைகளை மீறுவதாகவும் கோஷம் எழுப்பியிருந்தனர்.
இப்போராட்டத்தில் ஏராளமான சமூக ஆர்வலர்கள், நடிகர்கள் , எழுத்தாளர்கள், இசைக்கலைஞர்கள் மற்றும் பத்திரிகையாளர் கலந்துகொண்டு தமது எதிர்ப்பினை வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.