முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் வீட்டில் பணிபுரிந்த பணிப்பெண் ஒருவர் இன்று (11) இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.
சுகாதார அமைச்சுக்கு பெயரளவிலான நியமனங்களை வழங்கியதன் ஊடாக அரசாங்க சம்பளம் மற்றும் மேலதிக நேர கொடுப்பனவுகளை தவறாகப் பயன்படுத்தியதாக முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவிடம் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு நடத்தி வரும் விசாரணைளுக்கு அமையவே, குறித்த பெண் கைது செய்யப்பட்டதாக ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
எம்பிலிபிட்டிய பிரதேசத்தை சேர்ந்த பெண்ணே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார் எனவும் அவரை நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.