நாடு முழுவதும் நேற்று (15) பதிவான வீதி விபத்துக்களில் இரண்டு பெண்கள் உட்பட மூவர் உயிரிழந்துள்ளனர்.
திருகோணமலை, வெலிகம மற்றும் மினுவங்கொடை ஆகிய பகுதிகளில் இந்த விபத்துக்கள் பதிவாகியுள்ளன.
முதல் சம்பவம் திங்கள்கிழமை (16) அதிகாலை புல்மோட்டை-திருகோணமலை வீதி பகுதியில் நடந்தது.
நிலாவெளியில் இருந்து இறக்கக்கண்டி நோக்கிச் சென்ற மோட்டார் சைக்கிள் வீதியை விட்டு விலகி மின் கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானது.
இதினல் இறக்கக்கண்டியைச் சேர்ந்த 44 வயதான மோட்டார் சைக்கிள் சாரதி படுகாயடைந்த நிலையில் நிலாவெளி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது உயிரிழந்தார்.
இது தொடர்பில் குச்சவெளி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
ஞாயிற்றுக்கிழமை மாலை (15) பதிவான இரண்டாவது சம்பவத்தில், தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் வெலிகம வெளியேறும் இடத்திற்கு அருகில் கஹதுடுவவிலிருந்து மத்தள நோக்கிச் சென்ற கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத் தடுப்புச் சுவரில் மோதி பின்னர் விபத்துக்குள்ளானது.
இதில், சாரதி மற்றும் ஒரு பெண் பயணி பலத்த காயமடைந்து மாத்தறை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இதன்போது இரத்தினபுரி, மடகலஹதுரவைச் சேர்ந்த 68 வயதுடைய பயணி உயிரிழந்தார்.
விபத்தில் தொடர்புடைய கார் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன், வெலிகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மினுவங்கொடை பொலிஸ் பிரிவில் அதே இரவில் மூன்றாவது விபத்து நிகழ்ந்தது.
மினுவங்கொடையிலிருந்து வெயங்கொடை நோக்கிச் சென்ற மோட்டார் சைக்கிள், பமுனுவ சந்தியில் எதிர் திசையில் பயணித்த வேனுடன் மோதியது.
மோட்டார் சைக்கிள் சாரதி மற்றும் பெண் பின்னால் பயணித்தவர் முதலில் மினுவங்கொடை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் கம்பஹா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர்.
இதன்போது, மோட்டார் சைக்கிளின் பின்னார் வந்தவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
உயிரிழந்தவர் உடுங்கம்பொலை, ஹெண்டிமஹாராவைச் சேர்ந்த 53 வயதுடையவர் ஆவார்.
சம்பவம் தொடர்பில் மினுவங்கொடை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.