திட்டமிட்ட குற்றம் மற்றும் நிதி மோசடியுடன் தொடர்புடைய 88 நபர்களின் சொத்துக்களை இலங்கை பொலிஸார் முடக்கியுள்ளனர்.
இவர்களில் 26 பேர் திட்டமிட்ட குற்றச் செயல்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தல் தொடர்பாக சந்தேகிக்கப்படுபவர்கள்.
ஏனையவர்கள் பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றச்சாட்டுகளை எதிர்கொள்பவர்கள்.
முடக்கப்பட்ட சொத்துக்களில் நிலம், வீடுகள், வங்கிக் கணக்குகள், வாகனங்கள், நகைகள், வணிக வளாகங்கள் மற்றும் நெல் வயல்கள் ஆகியவை அடங்கும்.
சட்டவிரோத சொத்து குவிப்பைத் தடுப்பதை நோக்கமாகக் கொண்ட பல அண்மைய சட்ட நடவடிக்கைகளைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
2024 டிசம்பர் மற்றும் 2025 ஜனவரிக்கு இடையில், போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் தொடர்புடைய 15.25 மில்லியன் அமெரிக்க டொலர்கள் உட்பட, சுமார் 22.4 மில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறுமதியான குற்றச் சொத்துக்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
மே மாதத்தில், பயங்கரவாத அமைப்புகள் மற்றும் தனிநபர்களுக்குச் சொந்தமான சொத்துக்களை முடக்குவதாக அறிவிக்கும் அசாதாரண வர்த்தமானி அறிவிப்பை அரசாங்கம் வெளியிட்டது.
பாதுகாப்புச் செயலாளர், ஓய்வுபெற்ற ஏர் வைஸ் மார்ஷல் சம்பத் துயகோந்தா இந்த வர்த்தமானியை வெளியிட்டிருந்தார்.