பேருந்துகளில் பயணிக்கும் பயணிகளுக்கு பயணச்சீட்டு வழங்குவது கட்டாயமாக்கப்படும் என்று போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
இலங்கை போக்குவரத்து சபை மற்றும் தனியார் பேருந்துகளை இயக்குவதற்கான கூட்டு வேலைத்திட்டத்தை செயல்படுத்தவும் திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
கொழும்பு மத்திய பேருந்து நிலையத்தின் ஆய்வுப் பயணத்தில் பங்கேற்ற பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் இதனைக் கூறினார்.
இம் மாதம் 30 ஆம் திகதி முதல் வாகன செயல்பாட்டில் 85 பாதுகாப்புத் திட்டங்களை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் அவர் இதன்போது குறிப்பிட்டார்.

















