சென்னையில் இருந்து இன்று(29) தாய்லாந்து புறப்படத் தயாராக இருந்த விமானத்தில் திடீரென தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதையடுத்து விமானம் இரத்துச் செய்யப்பட்டது.
சென்னை விமான நிலையத்தில் இருந்து தாய்லாந்து தலைநகர் பேங்கொக் நோக்கி 146 பயணிகளுடன், தாய் எயார் வேஸ் நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் புறப்பட தயாரானது.
இதையடுத்து விமானத்தில் திடீரென தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதையடுத்து கடைசி நேரத்தில், விமானி பிரச்னையை கண்டறிந்ததால் விமானம் இரத்துச் செய்யப்பட்டது.
தற்போது விமானத்தில் தொழில்நுட்ப கோளாறை சரி செய்யும் பணி முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. பயணிகள் அனைவரும் விடுதிகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இன்று விமானம் இரத்துச் செய்யப்பட்டதால் பயணிகள் சிரமமடைந்துள்ளனர்.
விமானம் இன்று இரவு அல்லது நாளை (30) காலை தாய்லாந்திற்கு புறப்படும் என தாய் எயார்வேஸ் விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.



















