மெக்ஸிகோ நாட்டின் ஓக்சகா பகுதியில் மழை வேண்டி, மேயருக்கும்,முதலையொன்றுக்கும் பொதுமக்கள் திருமணம் செய்து வைத்த நிகழ்வு உலக அளவில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ள்ளது.
இந்த நிகழ்வு, ஓக்சகா மாநிலத்திலுள்ள சான் பெட்ரோ ஹுவாமெலுலா என்ற நகரத்தில் நடைபெற்றது. அந்நகரின் மேயராக செயற்பட்டுவரும் டேனியல் குடியெரஸ் பென்யா என்பவரே “பிரின்சஸ் கேர்ல்” என அழைக்கப்படும் ஒரு பெண் முதலையைத் திருமணம் செய்து கொண்டார்.
அப்பகுதியில் வசிக்கும் Chontal மற்றும் Huave எனப்படும் இரண்டு பழங்குடி சமூகங்களின் ஒற்றுமையை வலியுறுத்தும் வகையில் நடத்தப்படும் இத்திருமண நிகழ்வானது அப்பகுதி மக்கள் இயற்கை மீது வைத்திருக்கும் நெருங்கிய உறவை வெளிப்படுத்தும் விதமாகவும் அமைந்துள்ளது.
சுமார் 230 வருடங்களாக அப்பகுதி மக்கள் குறித்த மரபினை பின்பற்றி வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இத்தகைய சடங்குகள் மழை, விளைநில வளம் மற்றும் மீன்பிடி வளம் பெருக வேண்டி நடத்தப்படும் ஆன்மீக நிகழ்வாகவும் கருதப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.















