அவருக்கு பல்வேறு பிரபலங்களும், அவரது ரசிகர்களும் வாழ்த்துத் தெரிவித்து வரும் நிலையில்
தோனி தனது ஆரம்ப கால நண்பர்களுடன் பிறந்த நாள் கேக் வெட்டி கொண்டாடிய காணொளியொன்றும் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.
அதுமட்டுமல்லாது ”உச்சத்திற்கு சென்ற பின்னரும் தோனி தன்னுடைய ஆரம்ப கால நண்பர்களை மறக்காமல் அவர்களுடன் பயணிக்கிறார் என்றும் பலரும் அவரை வாழ்த்தி கருத்துக்களைப் பதிவிட்டு வருகின்றனர்.
2007 T20 உலக கோப்பை, 2011 50 ஓவர் உலகக் கோப்பை, 2013 சாம்பியன்ஸ் கோப்பை, ஐபிஎல் கோப்பை, சாம்பியன்ஸ் லீக் கோப்பை, டெஸ்ட் போட்டியில் 1 ஆம் இடம் என பல்வேறு சாதனைகளைப் படைத்த தலைவராக மகேந்திர சிங் தோனி விளங்குகின்றார்.
இந்நிலையில் தோனி தற்போது ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக தொடர்ந்து விளையாடி வருகிறார். நடந்து முடிந்த சீசனில் சிஎஸ்கே அணி படுதோல்வியை தழுவி 10 ஆவது இடத்தை பிடித்தது. இந்த நிலையில் அடுத்த சீசன் தோனி விளையாடுவாரா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டு இருந்தது.
தோனிக்கு உடல் தகுதி பிரச்சனை அதிகமாக இருப்பதால் அவர் ஓய்வு பெறுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அது குறித்து இன்னும் ஏழு மாதம் கழித்து தான் முடிவு எடுப்பேன் என்று தோனி விளக்கம் அளித்தார்.
அடுத்த ஐபிஎல் சீசன் தொடங்கும் போது தோனிக்கு 45 வயதை நெருங்கிவிடும். இந்த கட்டத்தில் தோனி ஐபி ம்எல் போட்டிகளில் விளையாடுவது என்பது அவர் உடல் நலத்திற்கும் சரியாக இருக்காது. இதனால் தோனி ஐபிஎல் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெற்றுவிடுவார் என எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

















